ETV Bharat / state

எவரெஸ்ட் சிகரம் அடைந்த முதல் தமிழ் பெண் - கல்பனா சாவ்லா விருது வழங்கி தமிழக அரசு கவுரவிப்பு! - MUTHAMIZHSELVI

Kalpana Chawla Award : எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ் பெண்ணான முத்து தமிழ்செல்விக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எவரெஸ்ட் சிகரம் அடைந்த முதல் தமிழ் பெண்- கல்பனா சாவ்லா விருது வழங்கி தமிழக அரசு பெருமிதம்

author img

By

Published : Aug 15, 2023, 5:44 PM IST

சென்னை: எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ் பெண் நா.முத்து தமிழ்செல்விக்கு இன்று (ஆகஸ்ட்15) துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஜோகல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி (வயது 34). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

மேலும், வில் வித்தை, மலை ஏற்றம் என விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த மார்ச் மாதம் பெண்கள் தினத்தன்று திருபெருமந்தூர் அருகே உள்ள 155 அடி உயரம் கொண்ட மலையை கண்களை கட்டி கொண்டு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இறங்கி தனது முதல் சாதனையைப் படைத்தார்.

முதல் சாதனை தனக்கு உறுதுணையாக இருந்த நிலையில் இரண்டாவதாக தனது மகள்களுடன் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலாங் கிராமத்தின் 165 அடி உயரமுள்ள மலையை 55 விநாடிகளில் இறங்கி சதானை படைத்துள்ளார். இது போன்ற சாதனைகளை படைத்து வந்த முத்தமிழ்செல்வி எவரெஸ்டின் மீது ஏறி சாதனை படைக்க பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் பொருளாதார வசதி இல்லாமல் தவித்த வந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்து தமிழ்செல்வியை நேரில் அழைத்து 10 லட்ச ரூபாய் அரசு சார்பில் உதவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமச்சர் உதயநிதி ஸ்டாலின் 15 லட்ச ரூபாய் வழங்கினார்.

இதையடுத்து எவரெஸ்ட் மலை ஏறிய முத்துதமிழ்செல்வி கடந்த 23ஆம் தேதி 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்தார். தற்போது தமிழ்நாட்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ் பெண்ணாக முத்துதமிழ்செல்வி சாதனைப் படைத்துள்ளார்.

மேலும் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், "எவரெஸ்ட்டை அடைவதற்குள் எவ்வளவு கண்ணீர், நடுக்கம், எவ்வளவு மரணங்கள் இவைகளை கடந்துான் அடைந்தேன். என் நினைவில் நின்றது ஒன்று மட்டும் தான் பலரின் கனவை சுமந்து செல்கிறேன் பின் வாங்கக் கூடாது என்பது தான்.

தண்ணீர் இல்லாமலும், உணவு இல்லாமலும் தான் பல நாட்கள் பயணம் இருந்தேன். எப்போதெல்லாம் பயம். பதற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் கண்களை மூடி தனது குடும்பத்தை நினைத்து கொள்வேன். உயரம் செல்ல செல்ல எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அளவிற்கு மிக லேசான பனி படலம், ஆக்சிஜன் குறைபாடுகளுக்கு நடுவே நடந்து சென்ற எனக்கு 10 அடிக்கு ஒரு சடலம் என நடுக்கத்தை ஏற்படுத்த கூடிய ஒரு பயணமாக தான் இருந்தது.

மேலும், இந்த நேரத்தில் இதற்கு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சருக்கும், விளையாட்டு துறை அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்" என்று முத்து தமிழ்செல்வி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘மாநிலப் பட்டியலில் கல்வி’ - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.