சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று (டிச.12) தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சக நடிகர்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையச்சேர்ந்தவர் ஓவியர் செல்வம். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான செல்வம், ரஜினி நடித்த பாபா படத்தின் முத்திரையை தனது விரல்களில் பிரஷ்ஷாக மாற்றி, அதில் ரஜினியின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
நேற்றைய முன் தினம் (டிச.10) பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. எனவே, ரஜினிகாந்தின் பிறந்தநாள் மற்றும் பாபா ரீ ரிலீஸ் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து இந்த ஓவியத்தை வரைந்ததாக ஓவியர் செல்வம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் வாழ்த்து!