ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் ஹரி பத்மனுக்கு ஜாமீன்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 6, 2023, 6:05 PM IST

சென்னை: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு படித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் போலீசார் மாணவியின் புகாரின் அடிப்படையில் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மிகவும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தில் நேர்கொண்ட பார்வை, நோட்டா படங்களில் நடித்த நடிகை அபிராமி ஹரி பத்மனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மே முதல் வாரம் ஹரி பத்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: "எங்க அமைச்சரை குறை கூறுவதா" - மாஜி அமைச்சர் வளர்மதியை விரட்டிய திமுகவினர்!

அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு தள்ளி வைத்ததால், தன் ஜாமீன் மனுவை ஹரி பத்மன் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பொருட்களை அடைக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.. தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.