ETV Bharat / state

'கக்கன்' திரைப்பட ஒலி நாடா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு! - துரை முருகன்

கக்கன் திரைப்பட ஒலி நாடா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

kakan movie
கக்கன் திரைப்பட ஒலி நாடா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு
author img

By

Published : Jul 25, 2023, 4:27 PM IST

சென்னை: தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று (ஜூலை22) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கக்கன் திரைப்பட ஒலி நாடா மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார். திரைப்படத்தின் ஒலி நாடாவை முதலமைச்சர் வெளியிட கக்கன் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர், தமிழ்நாடு அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், கக்கன். அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஜோசப் பேபி "கக்கன்" திரைப்படத்தை தயாரித்துள்ளார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், கே.எஸ். அழகிரி, "மணிப்பூரில் நடந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? பத்திரிகை செய்திகள் வந்ததே தவிர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதைத் தவிர, அறிக்கை அளித்ததைத் தவிர உடனடியாக கிடைத்த நீதி என்ன? உடனடியாக கிடைத்த தீர்வு தான் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ''70 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மணிப்பூர் சம்பவத்திற்கு இதுவரை பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் விவாதிக்கத் தயாராக உள்ளது. ஆனால், பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.

இவ்வளவு நாட்களாக நடைபெற்று வரும் கலவத்திர்கு கூட கூட பதில் சொல்லாத பிரதமர் வேற எதற்கு பதில் சொல்வார், பெண்மையை கேலி பொருளாக ஆக்கி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு சரியான நிதி கிடைக்க வேண்டும் இதை தான் இந்தியா மற்றும் இந்த உலகம் எதிர்பார்க்கின்றது இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்" எனக் கூறினார்.

முன்னதாக, அமைச்சர் துரைமுருகன் திருச்சியில் நடைப்பெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து செய்தியாளர் எழுப்பி கேள்விக்கு, “மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காண்பது ஆச்சரியம் தான்” என பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், மணிப்பூர் பழங்குடியின நேர்ந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானம் இச்சம்பவம் வெட்கக்கேடானது, முற்றிலும் நாகரீகம் அற்றது. இது போன்ற கொடூர குற்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், நமது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.