ETV Bharat / state

கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு!

author img

By

Published : Mar 16, 2020, 1:32 PM IST

சென்னை: இலங்கைக்கு கொடுத்த கச்சத்தீவை மீட்பதே, தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்பதே தீர்வு
கச்சத்தீவை மீட்பதே தீர்வு

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு வழங்கக் கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் நேரில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு திடமாக இருக்கிறது. மார்ச் 10ஆம் தேதி நிலவரப்படி, 3 தமிழ்நாடு மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளனர். 2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தினமும் 250 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆயிரத்து 750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் விடுவித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளும் கொண்ட 750 படகுகள் கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அறிக்கையில் மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் தெரிவித்திருந்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த திட்டங்களை அமல்படுத்தியதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பொருளாளர் பதவியைத் துறந்த துரைமுருகன்: 'அடுத்தது பொ.செ.தான்' - அடித்துக்கூறும் உ.பி.க்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.