சென்னையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவ்வாறு தொற்று பாதித்த அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி, இரண்டு காவலர்கள் பூரண குணமடைந்து இன்று பணிக்கு திரும்பினர். இவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வாழ்த்தி வரவேற்றார்.
சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, "கரோனாவிலிருந்து மீள்வதற்கு மன தைரியம் முக்கியம். தொற்று உறுதியான உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டேன்.
மேலும், மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், கரோனாவிலிருந்து மீள்வதற்கு கபசுரக் குடிநீர் பெரிதும் உதவியாக இருந்தது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அனைத்து சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறல்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த புள்ளி விவரம்