ETV Bharat / state

காணும் பொங்கல்: தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு - சுற்றுலா

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்
காணும் பொங்கல்
author img

By

Published : Jan 17, 2023, 8:14 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன 17) காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக காணும் பொங்கல் அன்று மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வது வழக்கம். அந்த வகையில் இன்று சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயினட்- வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை பெரியார் சிலை - அண்ணாசிலை வெல்லிங்டன் பாயின்ட் - ஸ்பென்சர் சந்திப்பு - பட்டுளாஸ் சாலை - மணிக்கூண்டு G.R.H பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை செல்ல வேண்டும்.

அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை செல்ல வேண்டும். பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் Google வரைபடத்தில் Road Ease app மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது Google Map மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோர், போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையும் நடந்து வருகிறது.வணிக வளாகங்கள், திரையரங்குகள் அமைந்துள்ள பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையை தொடர்ந்து, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருச்சி மலைக்கோட்டை, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடு ஆலயங்கள், வேலூர் ஜலகண்டேஸ்வர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தலங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பொங்கல் விழா - நாட்டுப்புறக் கலைகளை ஆடி அசத்திய பள்ளி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.