சிந்தனைகளிலும் செயலாக்கத்திலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், காணொளி மூலம் அனைத்துக் கட்சி ஆதரவு திரட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ்அப் காணொளியில், "கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள பல திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏராளமான நிதி தேவைப்படுகின்றது. அதனால் முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப காணொளி மூலமாக அனைத்துக்கட்சியின் ஆதரவை திரட்ட வேண்டும்.
ஒரு கை ஓசை ஏற்படவே ஏற்படாது இருகைகளும் தட்டினால்தான் ஓசை எழுப்ப முடியும். இந்த சூழ்நிலையிலே இன்றைக்கு மிகவும் தேவைப்படக் கூடியது அரசு தன் கைகளில் இருக்கின்ற காரணத்தால் முயற்சிகளை அதன்மூலம் செய்கிறோம் என்று சொன்னாலும் கூட பிற கட்சி தலைவர்களின் கருத்துகளை எல்லாம் கேட்டால் மேலும் மேலும் சிந்தனை வளரும் செயல்பாடுகள் சிறப்பாக அமையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை' திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர்