ETV Bharat / state

" குளறுபடிகளின் மொத்த உருவமே கருத்துக் கணிப்பு" - கி. வீரமணி!

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே குளறுபடிகளின் மொத்த உருவமே என திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

கி. வீரமணி
author img

By

Published : May 22, 2019, 9:04 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 20- ஆம் தேதி அன்று ஏடுகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு என்பது பா.ஜ.க.வினால் - ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்டம் என்பது, தற்போது வெளிவரும் பல்வேறு செய்திகள் மூலம் புரிய வருகிறது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூட அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை அவர் கூறிய கருத்துமூலம் எவரும் எளிதில் புரிந்து தெளிவடையலாம். ‘‘கருத்துக் கணிப்பெல்லாம் சரியாக வந்ததே இல்லை, அது வெறும் யூகம்தான்; அதை நம்பிடத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளார்.

முதல்கட்ட தேர்தல் பரப்புரை முடிவடைந்த ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு முன் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளுக்கும், மே 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் வித்தியாசங்கள் ஏராளம். முந்தையது காங்கிரசுக்கு சாதகமானது - பின் (இப்போது) வந்தது பா.ஜ.க.வுக்கு சாதகமானது!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு (மே 19) எந்த அடிப்படையில், எத்தனைப் பேரிடம் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை எந்தத் தொலைக்காட்சியும் வெளியிடுவதில்லை. இங்கு தேர்தலுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘‘எக்சிட் போல்’’ கருத்துக் கணிப்பு; ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி பி.ஜே.பி.,க்கு 297 இடங்கள் கிடைக்கும் என்று ஒளிபரப்பியது. அதைப் பார்த்த அதன் போட்டித் தொலைக்காட்சி நிறுவனம், மீண்டும் அடுத்த சில நிமிடங்களில் பி.ஜே.பி.,க்கு இருபது இடங்கள் கூடுதலாக அளித்து, பி.ஜே.பி.,க்கு 317 தொகுதிகள் கிடைக்கும் என்று மாற்றி ஒளிபரப்பியது.

அதாவது சில நிமிடங்கள் இடைவெளியில் 297-லிருந்து 317-க்கு ‘ஜம்ப்’ ஆகிவிட்டார்கள்! அதேபோல், ஒரு மாநில தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு நேரலையில் திடீரென்று 20 தொகுதிகள் பி.ஜே.பி.,க்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டது. தொலைக்காட்சி விவாதத்தில் இதற்கான காரணத்தை பங்கேற்றவர்கள் கேட்டார்கள்.

அதற்குப் பதிலளித்த நெறியாளர், இப்போதுதான் ஏழாவது கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு, உத்தரப்பிரதேசத்தில் 13, பஞ்சாபில் 3, மேற்கு வங்கத்தில் 8 என்று பி.ஜே.பி.,க்குக் கூடுதலாக 20 தொகுதிகள் கிடைத்துள்ளது என்று கணக்குச் சொன்னார்! இதன் கூட்டுத் தொகை கூடுதலாக 28 வருகிறதே என்று விவாதத்தில் கலந்துகொண்டவர் கூறியபோது, நெறியாளர் ‘திருதிரு’வென்று முழித்துவிட்டார்!

இதுபோல் ‘இந்தியா டுடே’ நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு நடத்திய ஆக்ஸிஸ் நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்ட முடிவுகளை மறுநாளே நீக்கிவிட்டது! பி.ஜே.பி. போட்டியிடாத சிறீநகரில் அந்தக் கட்சி வெல்லும் என்று கணிப்பு வெளியான ‘காமெடியும்‘ நடந்திருக்கிறது! வாக்குப் பதிவு முடிந்த ஒரு மணிநேரத்தில் எப்படி கணிப்பது?

நமது மாநில தொலைக்காட்சி ஒன்று காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் வாக்கு சதவிகிதம் தந்து இணையத்தில் வெளியிட்டார்களே அதுபற்றி மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்ததா? இல்லையே. மற்றொரு தனியார் நிறுவனம் 40 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்புகளை நடத்தியதாகச் சொல்கிறது. அதில் 30 ஆயிரம் பேர் இணைய தளம் வாயிலாகக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் 28 ஆயிரம் பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்! இது எப்படி சரியான கருத்துக் கணிப்பு ஆக இருக்க முடியும்?

எனவே, இது குளறுபடிகளின் மொத்த உருவம் தானே! பல சிறிய கட்சிகளை மிரட்டி பா.ஜ.க. கூட்டணியிடம் வரவழைக்கவே! பங்குச் சந்தையில் ஏற்றம் என்று காட்டி ஒருவகை ‘மாயை’ விளம்பரம் - பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த பா.ஜ.க.வுக்கும். அமித்ஷாவின் வித்தைகளில் இதுவும் திட்டமிட்ட ஏற்பாடாகவே இருக்க முடியும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 20.5.2019 அன்று ஏடுகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு என்பது பா.ஜ.க.வினால் - ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட ஏற்பாடு என்பது, தற்போது வெளிவரும் பல்வேறு செய்திகள்மூலம் புரிய வருகிறது.

குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடு அவர்களால்கூட அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை அவர் கூறிய கருத்துமூலம் எவரும் எளிதில் புரிந்து தெளிவடையலாம். ‘‘கருத்துக் கணிப்பெல்லாம் சரியாக வந்ததே இல்லை, அது வெறும் யூகம்தான்; அதை நம்பிடத் தேவையில்லை’’ என்று கூறியுள்ளார்.

ஆய்வாளர் பிரணாய் ராய் எழுதிய நூலில் உள்ள ஆழ்ந்த பல்வேறு ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, அது தவறாக அமைந்த பல்வேறு எடுத்துக்காட்டுகளையும், வாதங்களையும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இன்று காலை வெளிவந்த ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் (26.4.2019) சையது அபுதாஹிர் என்பவர் ‘‘கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா?’’ என்ற தலைப்பில் தக்க ஆதாரங்களுடன் ஒரு கட்டுரையில் இந்தப் புரட்டை அம்பலப்படுத்தியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் மறுக்க முடியாதவைகளாகும்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தின. இப்படி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு முன் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளுக்கும், மே 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் வித்தியாசங்கள் ஏராளம்.
முந்தையது காங்கிரசுக்கு சாதகமானது -
பின் (இப்போது) வந்தது பா.ஜ.க.வுக்கு சாதகமானது!
இதுபற்றி டில்லியின் மூத்த பத்திரிகையாளர்களிடையே பேசி திரட்டப்பட்ட தகவல்கள்.

எந்த அடிப்படையில் கருத்துக் கணிப்பு?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு (மே 19) எந்த அடிப்படையில், எத்தனைப் பேரிடம் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை எந்தத் தொலைக்காட்சியும் வெளியிடுவதில்லை.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுமுன் அது எடுக்கப்பட்ட விதங்களையும், விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆனால், இங்கு தேர்தலுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘‘எக்சிட் போல்’’ கருத்துக் கணிப்பு; ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி பி.ஜே.பி.,க்கு 297 இடங்கள் கிடைக்கும் என்று ஒளிபரப்பியது.
அதைப் பார்த்த அதன் போட்டித் தொலைக்காட்சி நிறுவனம், மீண்டும் அடுத்த சில நிமிடங்களில் பி.ஜே.பி.,க்கு இருபது இடங்கள் கூடுதலாக அளித்து, பி.ஜே.பி.,க்கு 317 தொகுதிகள் கிடைக்கும் என்று மாற்றி ஒளிபரப்பியது.

அதாவது சில நிமிடங்கள் இடைவெளியில் 297-லிருந்து 317-க்கு ‘ஜம்ப்’ ஆகிவிட்டார்கள்!

அதேபோல், ஒரு மாநில தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு நேரலையில் திடீரென்று 20 தொகுதிகள் பி.ஜே.பி.,க்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டது. தொலைக்காட்சி விவாதத்தில் இதற்கான காரணத்தை பங்கேற்றவர்கள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த நெறியாளர், இப்போதுதான் ஏழாவது கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு, உத்தரப்பிரதேசத்தில் 13, பஞ்சாபில் 3, மேற்கு வங்கத்தில் 8 என்று பி.ஜே.பி.,க்குக் கூடுதலாக 20 தொகுதிகள் கிடைத்துள்ளது என்று கணக்குச் சொன்னார்! இதன் கூட்டுத் தொகை கூடுதலாக 28 வருகிறதே என்று விவாதத்தில் கலந்துகொண்டவர் கூறியபோது, நெறியாளர் ‘திருதிரு’வென்று முழித்துவிட்டார்!

இதுபோல் ‘இந்தியா டுடே’ நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு நடத்திய ஆக்ஸிஸ் நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்ட முடிவுகளை மறுநாளே நீக்கிவிட்டது!

பி.ஜே.பி. போட்டியிடாத சிறீநகரில் அந்தக் கட்சி வெல்லும் என்று கணிப்பு வெளியான ‘காமெடியும்‘ நடந்திருக்கிறது!
வாக்குப் பதிவு முடிந்த 
ஒரு மணிநேரத்தில் எப்படி கணிப்பது?

மே 19 ஆம் தேதி மாலை 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்த ஒரு மணிநேரத்தில் அத்தனைத் தொகுதி கருத்துக் கணிப்புகளையும் வெளியிட்டன சில நிறுவனங்கள்!
குறுகிய கால அவகாசத்தில் எப்படி இத்தனைத் தொகுதிகளில் கருத்துக் கணிப்புகளையும் எடுத்திருக்க முடியும்?

உத்தரகாண்ட் மாநிலத்தில் ‘ஆம் ஆத்மி’ கட்சி போட்டியிடவே இல்லை. அங்கு வெளியான கருத்துக் கணிப்பில் அந்தக் கட்சிக்கு 2.9 சதவிகிதம் வாக்குகளை வழங்கியுள்ளது ஒரு நிறுவனம்.

நமது மாநில தொலைக்காட்சி ஒன்று காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் வாக்கு சதவிகிதம் தந்து இணையத்தில் வெளியிட்டார்களே அதுபற்றி மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்ததா? இல்லையே

மற்றொரு தனியார் நிறுவனம் 40 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்புகளை நடத்தியதாகச் சொல்கிறது. அதில் 30 ஆயிரம் பேர் இணைய தளம் வாயிலாகக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் 28 ஆயிரம் பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்! இது எப்படி சரியான கருத்துக் கணிப்பு ஆக இருக்க முடியும்?
எனவே, இது குளறுபடிகளின் மொத்த உருவம்தானே!

பல சிறிய கட்சிகளை மிரட்டி பா.ஜ.க. கூட்டணியிடம் வரவழைக்கவே!

பங்குச் சந்தையில் ஏற்றம் என்று காட்டி ஒருவகை ‘மாயை’ விளம்பரம் - பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த பா.ஜ.க.வுக்கும். அமித்ஷாவின் வித்தைகளில் இதுவும் திட்டமிட்ட ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பது.
அல்லது வேறு ஏதாவது உள்ளடி வேலைகளுக்கு இது முன்னோட்ட பிரச்சார உத்தியாகக்கூட இருக்கக்கூடும்!
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவையில் 17 தொகுதிகளில் வாக்குப் பதிவு எண்ணிக்கையைவிட கூடுதலான வாக்குகள் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவானது எப்படி? புகார் செய்தும் பயனில்லை.
மக்களின் கணிப்பு - ஆட்சியாளர்மீதுள்ள அதிருப்தி, வெறுப்பு என்று Anti-incumbancy இருக்கையில் முந்தைய இடங்களையோ, கூடுதல் இடங்களையோ அது பெறுவதென்றால், அதுவும் வியக்கத்தக்க வித்தையே!

அந்தோ ஜனநாயகமே! உன் கதி இதுதானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.