ETV Bharat / state

இடஒதுக்கீடு மறு ஆய்வுக்குட்பட்டதல்ல! கி.வீரமணி அறிக்கை

சென்னை : இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருப்பது, இடஒதுக்கீட்டை ஒழிக்கும் திட்டத்தின் ஆழம் பார்க்கும் செயல் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

k-veeramani-give-statement-about-reservation
author img

By

Published : Aug 21, 2019, 7:55 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

  • ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு குறித்து விவாதிப்போம் என்று கூறியிருப்பது ஆபத்தான யோசனை
  • ஏற்கனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையை தகர்க்கும் முயற்சியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்கள் நீங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெரிய நிர்வாகப் பதவிகளில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நேரடி நியமனங்கள், மாநில அரசுகளுக்குரிய நியமன அதிகார பறிப்புகள் ஆகியவை மூலம், முன்பே சமூக நீதிக்கு உலை வைக்கத்த தொடங்கப்பட்டு விட்டது.
  • இடஒதுக்கீட்டின் சமூக நிதியை அடியோடு ஒழித்துக்கட்டி வெறும் பொருளாதார அடிப்படை என்பதை சில காலம் வைத்து இறுதியில் இடஒதுக்கீடே தேவையில்லை என்ற முடிவை இந்த ஐந்தாண்டுக்குள் நிறைவேற்றிட முயற்சிக்கும் இந்த திட்டத்திற்கு சமூக நீதியாளர்கள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உட்பட அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க முன்வரவேண்டும்.
  • இடஒதுக்கீடு என்பது மறு ஆய்வுக்குட்பட்டதல்ல என்று இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பாஜகவிற்கு கிடைத்துள்ள புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை ஒழித்துவிடலாம் என்ற திட்டத்தின் முன்னோட்டம் தான் ஆர்.ஆர்.எஸ் தலைவரின் தற்போதைய பேச்சு.
  • 5000 ஆண்டு கால ஜாதிவருண தர்மக் கொடுமையிலிருந்து மீளும் எளிய முயற்சியே இடஒதுக்கீடு. அது சட்டப்படி நிரப்பப்படாத கொடுமையில் இப்படி ஒர் ஆரிய சூழ்ச்சியா?
  • எனவே தமிழ்நாட்டிலும், பிறமாநிலங்களிலும் உள்ள சமூகநீதியாளர்களும் தலைவர்களும் இதில் உரிய கவனம் செலுத்தி விழிப்புடன் இருக்கவேண்டும். ஆபத்து வரும் முன்னரே தடுத்தாக வேண்டும். இவ்வாறு, கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்

5000 ஆண்டு சமூக அநீதிக்கான தீர்வே இடஒதுக்கீடு

இடஒதுக்கீட்டைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கூற்று அபாயகரமானது!

மறுஆய்வுக்குரியதல்ல இடஒதுக்கீடு என்று நாடாளுமன்றம் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே!

விழிப்புடன் இருப்போம், ஆபத்து வருமுன்னே தடுப்போம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு குறித்து விவாதிப்போம் என்று கூறியிருப்பது ஆபத்தான யோசனையே! இடஒதுக்கீடு என்பது மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல என்று நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. 5000 ஆண்டு சமூக அநீதிக்கான தீர்வே - இடஒதுக்கீடு; - ஆபத்து வருகிறது அதனை வருமுன்னர் தடுப்போம் என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பகவத் அவர்கள் 18.8.2019 அன்று புதுடில்லியில் ‘ஞான உத்சவ்’ நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றும்போது, மிகவும் ஆபத்தான அவர்களது அடுத்த திட்டமான இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு, மிக லாவகமாக ‘விஷ உருண்டையை தேனில் நனைத்துக்’ கொடுப்பது போலப் பேசியுள்ளார்!

“இடஒதுக்கீடு - தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு தற்போது இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப்படி வழங்கப்பட்டு வருவதை நீக்கிவிட, இடஒதுக்கீடு வேண்டும் என்பவர்களும், வேண்டாம்  - கூடாது என்பவர்களும் சுமுகமான சூழ்நிலையில் அமர்ந்து விவாதித்து அதுபற்றி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்!”

- இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இது சமூகநீதிக்குக் குழிப்பறிக்கும் முயற்சி என்பதால், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் இதைக் கண்டித்து - “இது ஆபத்தான - இடஒதுக்கீட்டினை ஒழிக்க ஒரு முன்னோட்ட முயற்சி - நாடி பிடிக்கும் முதற்கட்டப் பணியின் துவக்கம் என்றே கருத வேண்டும்” என்று தெளிவாகக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் பெறுவோர் ஏழைகளாம்!

ஏற்கெனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15(4), 15(5) ஆகிய பிரிவுகளிலும், 16ஆவது பிரிவிலும் உள்ள, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்கள் நீங்கிய மற்ற “உயர் ஜாதியில் ஏழைகளுக்கு” 10 சதவிகித இடஒதுக்கீடு  அளித்துள்ளபடி (ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம்  மற்றும் மாதம் ஒன்றுக்கு 66,000க்கு சம்பாதிப்பவர்கள் “அந்த ஏழைகள்” என்று சட்டத்தில் வரையறுத்த நிலை) அரசமைப்புச் சட்டத்தின்படி பெரிய நிர்வாகப் பதவிகளில் இடஒதுக்கீட்டினைப் பின்பற்றாமல் நேரடி நியமனங்கள், மாநில அரசுகளுக்குரிய நியமன அதிகார பறிப்புகள் ஆகியவை மூலம் - முன்பே சமூக நீதிக்கு “உலை” வைக்கத் தொடங்கப்பட்டு விட்டது.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின்  ஆபத்தான  ‘மயக்க பிஸ்கட்’ 

இடஒதுக்கீட்டினை - சமூக நீதியை அடியோடு ஒழித்துக் கட்டி, வெறும் பொருளாதார அடிப்படை என்பதை சில காலம் வைத்து -இறுதியில் இடஒதுக்கீடே தேவையில்லை என்ற முடிவை இந்த அய்ந்தாண்டு ஆட்சி காலத்திற்குள் நிறைவேற்றிடும் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த ஆபத்தான தேன்  பூசப்பட்ட ‘மயக்க பிஸ்கட்டை’ சமூக நீதியாளர்கள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையோர் உட்பட அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்!

1951இல் நடந்தது என்ன!

1951இல் தந்தை பெரியார் காலத்தில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று உச்சநீதிமன்றம் உட்பட தீர்ப்புக் கூறிய பின், தந்தை பெரியார் தலைமையில் வெடித்துக் கிளம்பிய தமிழ்நாட்டு சமூக நீதி கிளர்ச்சியால்தான் முதன் முறையாக, ஜனநாயகவாதியான அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியவர்கள் அரசமைப்புச் சட்ட 15ஆவது பிரிவில் 4 என்ற உட்பிரிவினை - “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர்” என்று நீண்ட விவாதத்திற்குப் பின் பொருளாதார அடிப்படையை அறவே விலக்கி நிறைவேற்றினர்!

அதன் பிறகு இந்திரா சஹானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கில் - 9 நீதிபதிகளைக் கொண்ட முழு அமர்வில் இடஒதுக்கீடு பற்றியதான பல பிரச்சினை அலசி ஆராயப்பட்டு தீர்ப்புத் தரப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர்  என்ன சொன்னார்?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானப் பகுதியாகவும் (Basic Structure of the Constitution) இது ஆகி நிலைத்துள்ளது - அடிப்படை ஜீவாதார உரிமைகள் பகுதியைப்போலவே. (கேசவானந்த பாரதி வழக்கு)

எனவே இடஒதுக்கீடு - சமுகநீதி என்பது பிச்சை அல்ல; சலுகை அல்ல; ஒடுக்கப்பட்ட, காலங்காலமாக கல்வி உத்தியோகம் மறுக்கப்பட்ட அடிமை வகுப்புகள்   உரிமையாகும், பிறப்புரிமை ஆகும். இது - அம்பேத்கர் பயன்படுத்தும் சொல் (Servile Classes - Both SC,ST,OBC,MBC).  

இடஒதுக்கீடு மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல!

இதுபற்றி ஒரு முக்கிய தகவல். மண்டல் கமிஷன் பரிந்துரை செயலாக்கம்பற்றி திருமதி. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, விவாதம் தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேலும் குறிப்பாக மக்களவையில் நடைபெற்றபோது, இன்று மோடி கூட்டணி அரசில் அமைச்சராக உள்ள நண்பர் ராம்விலாஸ் பஸ்வான் தான் இந்தத் தீர்மானத்துக்கான விவாதத்தை அன்று துவக்கினார்.

அதில் அத்துணை உறுப்பினர்களும் -கட்சி பேதமின்றி, பிரதமர் இந்திரா காந்தி மூலம் “இடஒதுக்கீடு என்பது மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல (Not Negotiable)” என்று உறுதி கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு மத்தியில் அமைச்சராகவிருக்கும் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களே சாட்சியும்கூட!

அந்தப்படி அரசமைப்புச் சட்டம் அதன் அடிக்கட்டுமானப் பகுதியாக வைத்துள்ள இடஒதுக்கீட்டினைப் பற்றி இப்போது எதற்குத் தேவையற்ற விவாதம்?

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்  எதிர்ப்பும் - ஆதரவும்

இதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் சில ஆண்டுகளுக்கு முன், பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது இப்படி மறுபரிசீலனை செய்யவேண்டிய ஒன்றே இடஒதுக்கீடு என்று பேசி - அது பெரும் எதிர்ப்பை, எதிர் கொண்டது. நிதிஷ்குமார், லாலுபிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தங்கள் நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டு இடஒதுக்கீடு அவசியம் தேவை என்று கூறவில்லையா? அதன்பின் டில்லியிலேயே ஆர்.எஸ்.எஸ். தலைவர் தனது நிலையை மாற்றி இடஒதுக்கீடு தேவை என்று கூறவில்லையா?

இப்போது தங்களுக்கு புல்டோசர் மெஜாரிட்டி கிடைத்து விட்டது; இதைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டினை ஒழித்துவிடலாம் என்ற திட்டத்தின் முன்னோட்டம்தானே அண்மையிலான ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஆழம் பார்க்கும் வேலை.

5000 ஆண்டு சமுக நீதிக்கான  தீர்வே இடஒதுக்கீடு

5000 ஆண்டு கால ஜாதிவருண தர்மக் கொடுமையிலிருந்து மீளும் எளிய முயற்சியே இடஒதுக்கீடு. அது சட்டப்படியேகூட நிரப்பப்படாத கொடுமை உள்ளது. இந்நிலையில் இப்படி ஓர் ஆரிய சூழ்ச்சியா?

இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்; இது துரோணச்சாரியார்கள் காலமும் அல்ல, ஒடுக்கப்பட்டோர் ஏகலைவன்களும் அல்ல.

தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் உள்ள சமூகநீதியாளர்களும், தலைவர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் விழிப்புடன் இருப்பதே சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் நாம், தர வேண்டிய விலையாகும்.

ஆபத்து - வருமுன்னரே தடுத்தாக வேண்டும்.

சென்னை  

21.8.2019                                                                                   கி.வீரமணி 

                                                                தலைவர், திராவிடர் கழகம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.