தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவைத் தொடர்ந்து கு.பிச்சாண்டி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “19ஆவது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் இன்று பதவியேற்றுக் கொண்டேன். சட்டப்பேரவை உறுப்பினர்களை நாளை (மே.11) பதவியேற்க வைக்கிறேன். நிரந்தர சபாநாயகர் யார் என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டு வந்த பிறகு அவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு தனியாக நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க:ரெம்டெசிவிர் மருந்து வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்