பாரிமுனையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஏறக்குறைய ஆறு மாத காலமாக சதிவேலை செய்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கர்நாடகத்தில் ஜனநாயகப் படுகொலையை பாரதிய ஜனதா கட்சி செய்திருக்கிறது. இவர்களுடைய நோக்கம் இந்தியாவில் எதிர்க்கட்சி ஆட்சி இருக்கக்கூடாது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியோ, ராஜினாமா செய்ய வைத்தோ அந்த ஆட்சியை கவிழ்க்க வைத்துக்கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் முறையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கிறதென்று அவர் தெரிவித்தார் . இந்தியாவில் சரிபாதி மாநிலங்களில் எம்எல்ஏ ராஜினாமா செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க கூடிய அநியாயம் பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சி விரைவில் இதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும். தமிழக தேர்தலில் படுதோல்வி அடைந்ததைப்போல் கர்நாடகத்திலும் பாஜக படுதோல்வி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.