சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்துவுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஓமந்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஆனைமுத்து விரைவில் நலம்பெற வேண்டும் என தான் விழைவதாக மு.க. ஸ்டாலின் அறிக்கைவிடுத்திருந்தார். இந்தச் சூழ்நிலையில், மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கே.எஸ். அழகிரியும், ஆனைமுத்துவும் விரைவில் குணமடைய தான் விரும்புவதாக ட்வீட் செய்துள்ளார்.
கே. பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்துவும் (96) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இருவரும் நலம் பெற்று விரைவில் அவர்களுடைய வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தக் காலத்தில் இப்படியொருவரா? தோழர் நன்மாறன் குறித்து நெகிழும் ஆட்டோ ஓட்டுநர்!