ETV Bharat / state

தமிழ்நாடு மாநிலக் கல்விக்காெள்கையினை ஏப்ரல் மாதம் அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்!

தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை வரைவு அறிக்கை ஏப்ரல் மாதத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி குறித்து பாடத்திட்டம் வைப்பதற்கும் பரிசீலனை செய்யப்படும் என டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

மாநிலக் கல்விக் காெள்கை ஏப்ரல் மாதம் அரசிடம் சமர்பிக்க திட்டம்- நீதியரசர் முருகேசன் விளக்கம்

author img

By

Published : Jan 25, 2023, 5:53 PM IST

தமிழ்நாடு மாநிலக் கல்விக்காெள்கையினை ஏப்ரல் மாதம் அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்!

சென்னை: தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகளை மேற்காெண்டு வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள், பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்துகளை ஏற்கனவே கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், உயர் கல்வித்துறையில் மேற்காெள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநிலப் பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் புதியக்கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான முருகேசன் , உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்காெண்டனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன், 'மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பல்வேறு தரப்பினரிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பல்கலைக் கழக துணைவேந்தர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது துணைவேந்தர்கள் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்கக் கூடாது என்கிற கருத்தை தெரிவித்தனர். மேலும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருந்தால் தான் மாணவர்களின் திறன் அதிகரிக்கும்.

மேலும், மாநிலக் கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கிய ஏப்ரல் இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அரசுக்கு மாநிலக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கையை ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் கல்வியும் மாநிலக் கல்வி கொள்கையும் பரிந்துரையில் இடம்பெறும். புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் வரைவு அறிக்கையில் இடம்பெறும்' எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய மின் ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.