ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @10AM

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @10AM
10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @10AM
author img

By

Published : Jun 3, 2020, 10:01 AM IST

அதிமுக அரசுக்கு திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி

மதுரை: இந்த அரசுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறாமல், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் செலவினங்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ உள்ளபடியே அதிகாரம் உள்ளதா? அரசின் பதிலை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளார்.

'எம்.ஜி.ஆர் - கலைஞரை வசைபாடும் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்!'

நாமக்கல்: எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞரை வசைபாடும் கட்சிகளில் ஒருபோதும் இணைய மாட்டேன் என முன்னாள் திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் கே.பி. ராமலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டிற்கான வாகனங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் சம்மந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அனுமதி உபரிக்கு.. அள்ளுவதோ சவுடு! ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் உபரி மண் எடுக்க அனுமதி பெற்று ஆற்று மணலை சிலர் அள்ளிவருவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழ்நாடு கனிம வளத்துறை இயக்குநர் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் எம்.பி.ஏ. மாணவி மானபங்கம்!

மும்பை: 22 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி மாணவியை மானபங்கம் செய்து, அடித்து துன்புறுத்தியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

'கனிவான மனிதராக இருப்பதே உங்களை அழகாக்கும், உங்களது நிறமல்ல'

தனது சிறு வயதில் சந்தித்த நிறப் பாகுபாடு குறித்த அனுபவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

வீரர்கள் பயிற்சிக்குத் திரும்புவது குறித்து பிசிசிஐ ஆலோசனை!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் பயிற்சியைத் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடும் காங்கிரஸ்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைப்பது தொடர்பாக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் உதவியை காங்கிரஸ் எதிர்நோக்குகிறது.

ரஃபேல் போர் விமானங்கள் சரியான நேரத்தில் கிடைக்கும்

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாற்றம்!

வியன்னா: ஆஸ்திரிய நாட்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.