முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
சென்னை: முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
'ஏழை மக்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்' - ராகுல் காந்தி
டெல்லி : மத்திய அரசு, ஏழை மக்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊரடங்கில் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?
ஊரடங்கு உத்தரவினால் முடங்கிக் கிடக்கும் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காகக் கூட அருகாமையில் உள்ள பூங்காவிற்கோ, பொது இடத்திற்கோ செல்ல முடியாத நிலையில், அவர்கள் தங்கள் பொழுதுகளை எவ்வாறு கழித்தனர் என்பது குறித்து இச்செய்தி விவரிக்கிறது.
'முருங்கைக்காயை மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்ற விரைவில் தொழிற்சாலை!'
கரூர்: முருங்கைக்காயை மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றி, விற்பனை செய்ய அரசு சார்பில் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் தொழிற்சாலை அமைக்கவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது; கோவை மாநகர காவல் ஆணையர் அதிரடி!
கோவை: ராமநாதபுரம் காவல் எல்லைக்கு உட்பட்டப் பகுதியில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இளைஞரால் கொலை செய்யப்பட்ட காளை - மருத்துவக் குழு உடற்கூறாய்வு
கிருஷ்ணகிரி: இளைஞரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளையை, கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர்.
வேண்டுமென்றே வைரசை பரப்பினார்களா? - ரைசா
கரோனா வைரஸ் தொற்றை யாராவது வேண்டுமென்றே பரப்பினார்களா? என்று நடிகை ரைசா கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லைப் பகுதியில் உளவு பார்த்த இருவர் கைது!
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளை உளவு பார்த்ததாக இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பலாம்... புனேவில் புது முயற்சி!
மும்பை: ஊழியர்களின் உதவியின்றி வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வகையில், புனேவில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்புடனான திருமணம் குறித்த வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த மெலனியா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்துகொண்டதாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.