ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - today Top News

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

june 12 Top News of ETV Bharat Tamilnadu

author img

By

Published : Jun 12, 2020, 9:07 AM IST

1.சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு உயிரிழப்பு?

கரோனாவால் உயிரிழந்தவர்களில் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் விவரங்களையும் சுகாதாரத் துறை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாள்கள் தனிமை - சென்னை மாநகராட்சி

கரோனா பரிசோதனை மேற்கொண்டாலே அந்த நபர், அவரது குடும்பத்தினருடன் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

3.ஜெ. அன்பழகன் இறப்பால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3 காலியிடம்!

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உயிரிழந்த்தையடுத்து, தமிழ்நாட்டில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகியுள்ளன.

4.22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்!

கரோனா நோய்க் கிருமியால் ஏற்பட்டுள்ள விமான போக்குவரத்தின் வீழ்ச்சியை சமாளிக்க போராடுவதால் 22,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக லுஃப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது. செலவினங்களை சமாளிக்க மேலும் இதுபோன்ற பணியில் இழப்புகள் இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரேநாளில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய்!

குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் ஒரேநாளில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

6.கரோனா குறித்து பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் சீனா...!

கோவிட்-19 பெருந்தொற்று குறித்து சீனா பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுவருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

7.கலிபோர்னியாவில் காவலரை தலையில் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர்...!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காவல் துறை உயர் அலுவலர் ஒருவரைத் தலையில் சுட்டுவிட்டு ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.மீண்டும் திறக்கும் டிஸ்னி தீம் பார்க்!

கரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த டிஸ்னி தீம் பார்க் ஜூலை மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

9.இது விமான பயணமா... விண்வெளிப்பயணமா - ரகுல் ப்ரீத் சிங் புதிய வீடியோ!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் விமானத்தில் செல்லும்போது பிபிஇ கிட் அணிந்திருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

10."டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து ஐசிசியின் முடிவுக்காக காத்திருக்கிறோம்"- பிரிஜேஷ் பட்டேல்!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்சமயம் டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து ஐசிசியின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.