ETV Bharat / state

சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணையை நாளை தொடங்கவுள்ள நீதிபதி கலையரசன்!

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், தனது விசாரணையை நாளை முதல் தொடங்குகிறார்.

Judge Kalaiyarasan commision
சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணையை நாளை தொடங்கவுள்ள நீதிபதி கலையரசன்
author img

By

Published : Nov 16, 2020, 4:40 PM IST

Updated : Nov 16, 2020, 5:10 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைத்து உயர்கல்வித் துறை கடந்த 11ஆம் தேதி அரசாணையை வெளியிட்டது.

அண்ணா பல்கலை கிண்டி வளாகத்தில் தற்காலிக நியமனத்தில் அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா, ஆசிரியர் சங்கத் தலைவர் சக்தி நாதன் ஆகியோர் நியமனம் ஒன்றுக்கு 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பெற்று சுமார் ரூ. 80 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளனர். மேலும், சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தார்.

அதேபோல், தேர்வுத்துறையில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் பணியிட நியமனத்திற்கு ஆட்சிமன்றக்குழுவின் அனுமதி பெறப்படவில்லை எனவும் வரதராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதேபோல், ஆதிகேசவன் என்பவர் அளித்துள்ள புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தனது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி அவரின் மகள் மூலம் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு இயந்திரங்களை கொள்முதல் செய்துள்ளார் என்ற குற்றம் சாட்டப்பட்டது.

அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமே நிதி திரட்டும் என்று மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது உள்ளிட்ட பல விவகாரங்களில் உள்நோக்கத்துடன் சூரப்பா செயல்பட்டு வந்ததாக புகார்கள் வந்ததையொட்டி ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணையத்தின் நீதிபதி கலையரசனை இன்று உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா சந்தித்து பேசியதுடன், ஆவணங்களையும் வழங்கினார்.

இது குறித்து பேசிய கலையரசன், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன். சூரப்பா மீதான குற்றசாட்டுகள் குறித்த ஆவணங்களை உயர் கல்வித்துறையிடம் இருந்து பெற்றுள்ளேன்.

உயர் கல்வித்துறையின் சார்பில் விசாரணை ஆணையத்திற்கான இடம் தேர்வு செய்து அளிக்கப்படவுள்ளது. அதனைத் தாெடர்ந்து விசாரணை ஆணையம் தனது பணிகளை தொடங்கும். குற்றச்சாட்டுகள் குறித்து அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'ஒரு பைசாகூட கையூட்டு பெறவில்லை, விசாரணையை எதிர்கொள்ளத் தயார்' - துணைவேந்தர் சூரப்பா

Last Updated : Nov 16, 2020, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.