ETV Bharat / state

1987ல் தொடர்ந்த வழக்கில் 2023ல் தீர்ப்பு! உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதங்களில் ஓய்வூதியம்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!

அரசு துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்குள் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:57 PM IST

சென்னை: மாம்பலம் - கிண்டி தாலுகா தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றிய T.S.பெருமாள் என்பவர், கடந்த 1987ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பணியில் இருந்த போது உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி ஜெயா, குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி சைதாப்பேட்டை உதவி ஆட்சியர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்பும்படி மாவட்ட ஆட்சியர் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதியும் தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இருப்பினும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் 2004ஆம் ஆண்டு ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 13 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு ஜெயாவுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சைதாப்பேட்டை தாசில்தாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கு, நிலுவையில் இருந்த போது வழக்குத் தொடர்ந்த ஜெயா உயிரிழந்தார். இதையடுத்து அவரது 60 வயது மகன் நதீஷ் பாபு எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலையாரி பெருமாள் இறந்து 36 ஆண்டுகள் கடந்தும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, 13 ஆண்டுகளுக்கு பிறகும், ஓய்வூதிய பலன்களை பெறாமலேயே ஏழை பெண் ஜெயா உயிரிழந்துவிட்டார். இதுபோன்ற நிலை எவருக்கும் வரக்கூடாது, இதற்கு கடமை செய்யத் தவறிய அதிகாரிகளே காரணம் என கண்டித்தனர்.

சொற்ப தொகையே குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டிய நிலையில், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்த அரசின் செயல் மனிதத் தன்மையற்றது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதற்கு எந்த அதிகாரி காரணம் என பொறுப்பாக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு, குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் எனவும், ஆறு மாதங்களில் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த மேல் முறையீட்டு வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற போதும், அதை எதிர்த்து மேல் முறையீடு செல்லக் கூடும், குடும்ப ஓய்வூதியம் கிடைக்க தாமதமாகும் என்பதால் அதை தவிர்ப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததுடன், எட்டு வாரங்களில் நதீஷ்பாபுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தீவுத் திடலில் பட்டாசு விற்பனை டெண்டர் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.