ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் - Judge G Jayachandran

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமனம் செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Judge G. Jayachandran appointed to hear AIADMK general committee cases

author img

By

Published : Aug 5, 2022, 9:51 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால் வழக்கினை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

இன்றைய விசாரணையின் போது இருமுறை இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் மற்றொரு நீதிபதி புதிதாக விசாரணை நடத்துவதே முறையாக இருக்கும் எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனக் கூறி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்குகள்... வேறு நீதிபதிக்கு மாற்றமா? மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் தரப்பு

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எந்த நீதிபதி முன்பும் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு தொடர்பான வழக்குகளை புதிய நீதிபதி விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் விலகல் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைப்பது தேவையில்லாத ஒன்று' - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.