ETV Bharat / state

இன்று..! ரயிலில் சென்னைக்கு வருகிறது தண்ணீர்... - ஒரு கோடி லிட்டர்

வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து இன்று சென்னைக்கு ரயிலில் தண்ணீர் வருகிறது.

இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது தண்ணீர்!!
author img

By

Published : Jul 11, 2019, 10:52 AM IST

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல்வேறு தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரிநீரை, அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து விநியோகம் செய்ய திட்டமிட்டது.
இதற்காக, ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.

பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டுச்சக்கரக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் ரயில் நிலையத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் எடுத்துவர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் குழாய்கள் செல்லவேண்டிய பாதையில் ரயில்வே தண்டவாளங்கள் இருந்ததால் இந்த பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து 17 பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். ஏற்கனவே ரயில் நிலையம் அருகில் உள்ள பரசம்பட்டை பாலத்தின் கீழ் உள்ள கால்வாய் வழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்ல முடிவு செய்தனர். அதன்பின், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து 200 லாரிகளின் மூலம் ராட்சத குழாய்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி கொண்டுவரப்பட்டன. பின்னர் மேட்டுச்சக்கர குப்பம் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே நிலையம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டன.

அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக நேற்று காலையில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் வழியாக சோதனைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அப்போது சில இடங்களில் குழாய்களில் கசிவுகள் ஏற்பட்டதை அறிந்து உடனடியாக கசிவுகளை சரி செய்து, நேற்று நள்ளிரவு பணிகள் முடிக்கப்பட்டன. இன்று அதிகாலை ரயில் நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரயில்பெட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரயில்பெட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்னும் சில மணி நேரத்தில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இது போன்று தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ரயில் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று இருந்தாலும் கூட, தற்போது இந்த பணிகளில் பல்வேறு தடைகள் இருந்ததால் சென்னைக்கு தண்ணீர் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பம் நேற்று வரை நீடித்தது.

இந்த நிலையில் சென்னை மக்களின் நலன் கருதி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இரண்டே வாரத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் முடித்து, சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு நடைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என, தினமும் நான்கு நடைகளில் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது தண்ணீர்

இதற்காக பிரத்யேகமாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டேங்கர் பொருத்தப்பட்ட இரண்டு ரயில்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் மொத்தம் 50 டேங்கர்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தலா ஐம்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். அந்த வகையில் ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும், இதற்கு கட்டணமாக தெற்கு ரயில்வே நடை ஒன்றிற்கு 8 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அதன்படி நாள் ஒன்றுக்கு மொத்தம் 30 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் தமிழக அரசிடம் பெறப்படும் என தெரிகிறது. வில்லிவாக்கம் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இந்த தண்ணீர் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Intro:சிக்கல்களை உடைத்து சாதித்து காட்டிய அதிகாரிகள்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றது- இன்னும் சில மணி நேரத்தில் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் வருகிறது
Body:தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல்வேறு தங்கும் விடுதிகள் ஓட்டல்கள் இழுத்து மூடப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரிநீரை அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டது இதற்காக தெற்கு ரயில்வேயிடம் அனுமதி கோரப்பட்டது பின்னர் இந்த திட்டத்திற்காக 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது அதன்படி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டுச்சக்கரக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் ரயில் நிலையத்தில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் எடுத்துவர பணிகள் மேற்கொள்ளப்பட்டன இதற்கிடையில் ரயில் தண்டவாளங்களை தாண்டி குழாய்கள் கொண்டு செல்ல வேண்டியதால் இந்த பணிகளில் சில சிக்கல்கள் ஏற்பட்டது இதையடுத்து 17 பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் ஏற்கனவே ரயில் நிலையம் அருகில் உள்ள பரசம்பட்டை பாலத்தின் கீழ் உள்ள கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்தனர் இதையடுத்து ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து 200 லாரிகளில் ராட்சத குழாய்கள் கடந்த மாதம் 27ம் தேதி கொண்டுவரப்பட்டன பின்னர் மேட்டுச்சக்கர குப்பம் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே நிலையம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டது இந்த நிலையில் குழாய் பதிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் அதன்படி நேற்று காலையிலிருந்து நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் வழியாக சோதனைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது அப்போது சில இடங்களில் குழாய்களில் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக அந்த கசிவு சரி செய்யப்பட்டது பின்னர் அடுத்த கட்டமாக ரயில் நிலையத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி வரை குழாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது இந்த பணிகள் நேற்று நள்ளிரவு முடிவடைந்தது இதையடுத்து இன்று அதிகாலை ரயில் நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரயில்வே வேகன்களில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டது இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது இதையடுத்து இன்னும் சில மணி நேரத்தில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கடந்த காலங்களில் இது போன்று தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ரயில் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று இருந்தாலும் கூட தற்போது இந்த பணிகளில் பல்வேறு தடைகள் இருந்த்தால் சில சிக்கல்கள் ஏற்பட்டது எனவே சென்னைக்கு தண்ணீர் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பம் நேற்று வரை நீடித்தது இந்த நிலையில் சென்னை மக்களின் நலன் கருதி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இரண்டே வாரத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் முடித்து தற்போது சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வெற்றிகரமாக பணிகளை முடித்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது அதாவது ஒரு நடைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என மொத்தம் தினமும் நான்கு நடைகளில் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர் இதற்காக பிரத்யேகமாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டேங்கர் பொருத்தப்பட்ட இரண்டு ரயில்கள் வரவழைக்கப்பட்டுள்ளது இந்த ரயில்களில் மொத்தம் 50 டேங்கர்கள் உள்ளன ஒவ்வொன்றும் தலா ஐம்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும் அந்த வகையில் ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் இதற்காக கட்டணமாக தெற்கு ரயில்வே நடை ஒன்றிற்கு 8 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கள் உள்ளதாக கூறப்படுகிறது அதன்படி நாள் ஒன்றுக்கு மொத்தம் 30 லட்சத்து 60 ஆயிரம் கட்டணம் தமிழக அரசிடம் பெறப்படும் என தெரிகிறது. வில்லிவாக்கம் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இந்த தண்ணீர் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.