ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சராக ஜகர்நாத் மதோ இருந்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறி இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அக்டோபர் 19ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 10ஆம் தேதி அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இணை இயக்குனர் சுரேஷ் ராவ் கூறுகையில், "அமைச்சர் ஜகர்நாத் மதோவுக்கு கரோனா தொற்றால் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவர் இங்கு வந்தார்.
அவருக்கு எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.
மேலும் அவரின் நுரையீரல் செயலிழந்ததால், அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது அவர் சுவாசக் கருவிகள் இன்றி தானாக சுவாசிக்கிறார்.
அவருக்கு மூச்சுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறன. அமைச்சர் ஜகர்நாத் மதோ முழுவதும் குணம் அடைந்த பின்னர் ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் அனுப்பி வைக்கப்படுவார்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,236 பேருக்கு கரோனா தொற்று உறுதி