ETV Bharat / state

நாங்கள்தான் வெற்றி பெற்றோம் - அமைச்சர் ஜெயக்குமார் - சென்னை விமானநிலையம்

சென்னை: வேலூர் தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jeyakumar press meet
author img

By

Published : Aug 9, 2019, 8:51 PM IST

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்துவிட்டு விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா நீரை பெறுவதற்காக ஆந்திர முதலமைச்சரை சந்திக்க நானும் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்று தமிழக முதலமைச்சர் தந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தோம்.

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்க ஆந்திர முதலமைச்சர் ஒப்புக்கொண்டு உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் மூலம் சென்னையில் உள்ள குடிநீர் பற்றாக்குறை வேகமாகத் தீர்ந்துவிடும்" என்றார்.

ஜெயக்குமார் பேட்டி

இதன்பிறகு வேலூர் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள்தான் வெற்றி பெற்றோம். திமுக பணத்தை நம்பி வெற்றி பெற்றது. வெறும் 8000 ஓட்டுக்காக 125 கோடி செலவிட்டு திமுக வெற்றி பெற்றுள்ளது. இது மோசடியான வெற்றி. எங்களைப் பொறுத்த வரை மக்கள் மனதில் நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். பழம் நழுவி பாலில் விழும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கீழே விழுந்துவிட்டது விரைவில் பழம் பாலில் விழும்" என்றார்

Intro:அமைச்சர் வேலுமணி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:அமைச்சர் வேலுமணி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா நீரை பெறுவதற்காக ஆந்திர முதல்வரை சந்திக்க தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் நானும் அமைச்சர் ஜெயக்குமார் என்றும் தமிழக முதலமைச்சர் தந்த கடிதத்தை ஆந்திர முதல்வரிடம் தந்தோம் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை வழங்க ஆந்திர முதல்வர் ஒப்புக்கொண்டார் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் இதன் மூலம் சென்னையில் உள்ள குடிநீர் பற்றாக்குறை வேகமாகத் தீர்ந்து விடும் ஏற்கனவே 4 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் தற்போது 4 டிஎம்சி வழங்க வேண்டும் 8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டால் நல்லது தான் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள் தான் வெற்றி பெற்றோம் திமுக பணத்தை நம்பிய வெற்றி பெற்றது வெறும் 8000 ஓட்டுக்காக 125 கோடி செலவிட்டு திமுக வெற்றி பெற்றுள்ளது இது மோசடியான வெற்றி எங்களைப் பொறுத்த வரையிலும் மக்கள் மனதில் நாங்கள் தான் வெற்றி பெற்றுள்ளொம் பழம் நழுவி பாலில் விழும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கீழே விழுந்துவிட்டது விரைவில் பழம் பாலில் விழும் என கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.