தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து தேர்வாணையம் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி இதுவரை 35 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தொடந்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை நீதிமன்றக் காவலிலிருந்து எடுத்து ஏழு நாட்கள் விசாரணை காவலில் விசாரித்த சிபிசிஐடியினர் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி சிபிசிஐடியினர் ஜெயக்குமார் 20க்கும் மேற்பட்ட அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கும் மேல் பல்வேறு நபர்களிடம் விற்பனை செய்துள்ளதாகக் கூறுகின்றனர். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.
இதையும் படிங்க: வதந்திகளைப் பரப்புவோருக்கு டிஎன்பிஎஸ்சி கண்டனம்