ETV Bharat / state

'விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்' - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Dec 11, 2019, 11:18 PM IST

Updated : Dec 11, 2019, 11:45 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ' திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நடத்தக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுரையின் அடிப்படையில் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி உள்ளாட்சியில் தொடரவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். ஆனால், திமுகவினர் தேர்தலை நிறுத்துவதற்கு சந்து, பொந்துகளில் உள்ள சட்டங்களை அலசி ஆராய்வார்கள். அவர்களுக்கு மக்களை சந்திப்பதற்குப் பயமாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனக் கூறியுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்தல் நடக்கும்.

அடுத்த கட்டமாக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும். அதிமுக கூட்டணி கட்சிகளின் இட ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தை எந்தவித பிணக்கும் இல்லாமல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் விரைவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் வெளியிடப்படும்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

கூட்டணிக் கட்சிகளுடன் மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய பட்டியலை அனுப்பி வைப்பார்கள். அதனடிப்படையில் அதிமுக விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

கனிமொழியிடம் எழுத்துப் பூர்வமான ஆதாரம் கேட்ட உயர் நீதிமன்றம்!

Intro:அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது?
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Body:அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது?
சென்னை,
அதிமுக கட்சி வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நடத்தக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மக்களை சந்திக்க திராணி இல்லாமலும், தைரியமில்லாமலும் எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டுமென பல்வேறு திட்டங்களை அரங்கேற்றினர்.
தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்ற அவர்களின் திட்டத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பேரிடியாக விழுந்துள்ளது. திமுகவினர் இனிமேலும் உச்சநீதிமன்றத்தை மேலும் மேலும் அணுகாமல் மக்களை சந்திப்பது தான் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுரையின் அடிப்படையில் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி உள்ளாட்சியில் தொடரவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். ஆனால் திமுகவினர் தேர்தலை நிறுத்துவதற்கு சந்து, பொந்துகளில் உள்ள சட்டங்களை அலசி ஆராய்வார்கள். அவர்களுக்கு மக்களை சந்திப்பதற்கு பயமாக உள்ளது.

உச்சநீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என கூறியுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் தேர்தல் நடக்கும்.

அடுத்த கட்டமாக நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.
அதிமுக கூட்டணி கட்சிகள் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் எந்தவித பிணக்கும் இல்லாமல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. மகிழ்ச்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் விரைவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் வெளியிடப்படும்.
கூட்டணி கட்சிகளுடன் மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய பட்டியலை அனுப்பி வைப்பார்கள் .அதனடிப்படையில் அதிமுக விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.

Conclusion:

viduvaal 3 G live pack
Last Updated : Dec 11, 2019, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.