ETV Bharat / state

’முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்’ - அமைச்சர் ஜெயக்குமார் - nominee of chief minister

சென்னை: முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு எடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசிய காணொலி
அமைச்சர் ஜெயக்குமார் பேசிய காணொலி
author img

By

Published : Aug 12, 2020, 2:53 PM IST

சென்னை ராயபுரத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தற்போது கருத்து கூறுவது ஆரோக்கியமாக இருக்காது. அது குறித்து உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். இது தொடர்பாக, அதிமுகவினர் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறும் கருத்து கட்சியின் கருத்து இல்லை.

அமைச்சர் ஜெயக்குமார் பேசிய காணொலி

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக விபி துரைசாமி கூறியிருக்கும் கருத்து, பாஜகவின் அதிகாரப்பூர்வ கருத்தாக இருக்காது. பாஜக தலைவர் முருகன் கூறுவதுதான் அதிகாரப்பூர்வ கருத்தாக இருக்கும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.