ETV Bharat / state

'சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம்' - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற ஒருமித்த கருத்தில் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jayakumar
author img

By

Published : Nov 8, 2019, 5:31 PM IST

தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. அதிமுகவிற்கு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம். திமுக பலவீனமாகி விட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையும் சந்திப்போம். பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸ் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்காமல் ஸ்டாலின் வாதம் செய்வதை வைத்துப் பார்த்தால் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ எனத் தோன்றுகிறது" என்றார்.

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் ஒரு பொழுதும் சேர்ப்பதில்லை என கட்சியில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தாக எடுத்த முடிவில் அதிமுக உறுதியாக இருக்கிறது" எனக் கூறினார்.

வீரமாமுனிவர் சிலை, உருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் பேசியதற்கு திமுக போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு, அமைச்சர் பாண்டியராஜன், " ஸ்டாலின் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்போம். இதற்கும் மேல் இதை பேச வேண்டாம் என நினைக்கிறோம், அவர் முன்வைத்துள்ள அனைத்து கேள்விகளுக்கும் கட்சி சார்பில் பதிலளிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: ஆளுமைமிக்க தலைவராக மாறுவாரா ரஜினி?

Intro:Body:தமிழ் அறிஞர் வீரமா முனிவர் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உரு வப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், ஜெயகுமார், செங்கோட்டையன், பாண்டியராஜன், பெஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

*அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார்,*

வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது.

அதிமுகவிற்கு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம்,
திமுக பலவீனமாகி விட்டது,
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலையும் சந்திப்போம்.

பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸ் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்காமல் ஸ்டாலின் வாதம் செய்வதை வைத்து பார்த்தால் குற்றச்சாட்டு உணமையாக இருக்குமோ என தோன்றுகிறது.

சசிக்கலாவை கட்சியில் இணைப்பது குறித்து துணை முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் ஒரு பொழுதும் சேர்ப்பதில்லை என கட்சியில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தாக எடுத்த முடிவில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் பேசியதற்கு திமுக போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு

*அமைச்சர் பாண்டியராஜன் பதில்*

ஸ்டாலின் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்போம், இதற்கு மேல் இதை பேச வேண்டாம் என நினைக்கிறோம், அவர் முன்வைத்துள்ள அனைத்து கேள்விகளுக்கும் கட்சி சார்பில் பதிலளிப்போம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.