கரேனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்டு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாரதப் பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க கரோனா நோய் பரவுவதைத் தடுக்க இன்று (22.03.2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்ட ஊரடங்கு நிகழ்வு பல்வேறு தரப்பு மக்கள், தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவுற உள்ளது.
இந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு மக்களின் நலன்கருதி நாளை (23.03.2020) காலை 5 மணிவரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெற எந்தத் தடையும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்படுகிறது.
இத்தொடர் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மார்ச் 31 வரை முழுமையாக முடங்கும் பஞ்சாப் - முதலமைச்சர் அதிரடி!