தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ‘புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்கக்கூடாது, தொடக்கக் கல்வித் துறை அளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 145 முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே சுமுகமான உறவு ஏற்படுவதற்கு முதலமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும். முதலமைச்சர் அழைத்து பேசி எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 13ஆம் தேதி கல்வி மாவட்ட அளவில் பேரணி நடத்தப்படும். அதன் பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம்’ என தெரிவித்தார்.