ETV Bharat / state

jacto geo: ஜாக்டோ-ஜியோ அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!

author img

By

Published : Apr 8, 2023, 3:56 PM IST

ஏப்ரல் 11 ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11-ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, முதலமைச்சரின் ஆணைப்படி, இன்று ( ஏப். 8 ) பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவானது தலைமைச் செயலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையானது ஒன்றரை நேரம் நடைபெற்றது.

முன்னதாக, இன்றைய கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு. வெங்கடேசன், இரா. தாஸ், கு.தியாகராஜன் ஆகியோர் மூன்று அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அமைச்சர்கள் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பான விரிவான தயாரிப்போடு கலந்து கொண்டனர்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், நிதி மற்றும் மனித வள‌ மேலாண்மை துறை அமைச்சரின் ஆசிரியர் அரசு ஊழியர் விரோத போக்கினையும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். நிதி மற்றும் மனித வள‌ மேலாண்மை துறை அமைச்சரின் ஊழியர் விரோத போக்கினால் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லதாகத் தெரிவித்தனர்.

மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான பணிப் பாதுகாப்பு சட்டம், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையின் முடிவில், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற‌ வேண்டுகோளை விடுத்தனர்.

இதன் பின்னர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, முதலமைச்சர், ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததற்கும் அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும் நல்லெண்ண நடவடிக்கையாக ஏப்ரல் 11 ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கோயில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு: கீரனூர் அருகே இளைஞர் படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.