ETV Bharat / state

ஆளும் கட்சியில் அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது: ஜாக்டோ ஜியோ - ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

சென்னை : பள்ளிகள் திறந்தும் புத்தகம் வழங்வில்லை, ஆளும் கட்சியில் அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆளும் கட்சியில் அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது ஜாக்டோ ஜியோ
author img

By

Published : Jun 19, 2019, 11:31 PM IST

ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, அவர் பேசுகையில், "ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்பொழுது முதல்வரின் அழைப்பை ஏற்று, மாணவர்களின் தேர்வினை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட ஜாக்டோ ஜியோவின் நடவடிக்கைகள் தற்போதுதான் மீண்டும் துவங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது , 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு அவர்கள் மீது போடப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

இதுகுறித்து, எங்களின் கோரிக்கையை முதலமைச்சர் அமைச்சர்கள் அரசு செயலாளர்களிடம் அளித்து 15 நாட்கள் அவகாசம் அளிக்கவுள்ளோம். பின்னர், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு அறிவிக்கப்படும்.

அண்ணா, எம்ஜிஆர் ,ஜெயலலிதா போன்றவர்களின் காலத்திலும் போராட்டம் நடத்தினோம். அப்போது அவர்கள் எங்களை அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பார்கள். எனவே அரசுக்கும், அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்.

ஆளும் கட்சியில் அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது ஜாக்டோ ஜியோ

பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் கழிவறைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பாமல் புத்தகங்களை அனுப்பிவிட்டதாக கூறுகிறார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களை மிரட்டும் வகையிலும் ஜென்மத்திற்கும் போராடக் கூடாது என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். எனவே முதலமைச்சர் அவரை அழைத்து அறிவுரை கூற வேண்டும் , தேர்தலுக்கு முன்பே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் யாரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறவில்லை, மக்களாக வாக்களித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிமுக அரசுக்கு தற்போது தேர்தலில் கிடைத்த இடங்கள் கூட கிடைக்காமல் போகும் என கூறினார்.

Intro:தற்போதைய சூழலில் ஆளும் கட்சியில்
அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது
ஜாக்டோ ஜியோ குற்றச்சாட்டு

Body:சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்பொழுது முதல்வரின் அழைப்பை ஏற்று பொது மக்களின் நலன் மற்றும் மாணவர்களின் தேர்வினை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ வின் நடவடிக்கைகள் தற்போது தான் மீண்டும் துவங்கியுள்ளது.
தேர்தல் காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல்5, 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் கைவிட்டு அவர்கள் மீது போடப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான போக்கினை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
இதுகுறித்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சர் அமைச்சர்கள் அரசு செயலாளர்களிடம் அளிக்க உள்ளோம். அதன் பின்னர் அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க உள்ளோம். அதன் பின்னர் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
அண்ணா, எம்ஜிஆர் ,ஜெயலலிதா போன்றவர்களின் காலத்திலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அவர்கள் எங்களை அழைத்து பேசி பிரச்சினையை தீர்ப்பார்கள். எனவே அரசுக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியருக்கும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்.
இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் தெரிகிறது. எனவே இது பற்றி நாங்கள் இப்போது முடிவு எடுக்க மாட்டோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி வருகின்றார். பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் கழிவறைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பாமல் புத்தகங்களை அனுப்பி விட்டதாக கூறுகிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களை மிரட்டும் வகையிலும் ஜென்மத்திற்கும் போராடக் கூடாது என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். எனவே முதலமைச்சர் அவரை அழைத்து அறிவுரை கூற வேண்டும்.

தேர்தல் நடப்பதற்கு முன்பு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்திருக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கையை ரத்து செய்யவில்லை. ஆசிரியர்கள் யாரும் அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறவில்லை. மக்களாக வாக்களித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிமுக அரசுக்கு தற்போது தேர்தலில் கிடைத்த இடங்கள் கூட கிடைக்காமல் மேலும் தோழிகளை சந்திக்க நேரிடும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.