ETV Bharat / state

எம்.பில் படிப்பு நிறுத்தம் - கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு - m.phill study in university

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப்படிப்பு நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

எம்.பில் படிப்பு நிறுத்தம் -   கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

author img

By

Published : Jun 28, 2021, 8:30 PM IST

எம்.பில் பட்டப் படிப்பு நடப்பு கல்வியாண்டு 2021 - 2022 இருந்து நிறுத்தப்படுவதாக (ஜுன் 26) ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், " தேசியக்கல்விக் கொள்கை 2020 தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்ற அரசின் கொள்கை முடிவினை வரவேற்கிறோம். உயர்கல்வியின் வளர்ச்சிக்காகவும், சமூக நலனைப் பாதுகாக்கவும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு துணை நிற்கும்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கு

மேலும் பல்கலைக்கழக மானியக்குழு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் கலவை முறை கற்றல் மற்றும் கற்பித்தல் எனும் முறையை உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் இணைய வழியில் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை எந்தவொரு பாடத்தையும் நடத்தலாம், மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேசிய, சர்வதேச கல்வி நிறுவனங்கள் எதில் வேண்டுமானலும் இணைய வழியில் 40 சதவீதம் பாடங்களை கற்கலாம் எனவும், தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வி, கல்லூரி இடைநிற்றலுக்கு ஊக்கம் என பல ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளன.

1
1

இந்த கலவை முறை கற்றல் காரணமாக எதிர்காலத்தில் உயர்கல்வியை தனியார்மயப்படுத்துவதும், அதன் மூலம் கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மாணவர் சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புக்கு கட்டாய நுழைவுத்தேர்வுமுறையை அமல்படுத்துவது தான் நோக்கமே என்ற சந்தேகம் வலுப் பெற்றுள்ளது.

1
1

ஏழை மாணவர்களை உயர்கல்வியில் இருந்து வெளியேற்றும் சூழ்ச்சி

இணையவழிக்கல்வி என்பது டிஜிட்டல் கட்டமைப்பற்ற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை உயர்கல்வி தளத்தில் இருந்து புறந்தள்ளவும், வெளியேற்றவும் நடக்கும் சூழ்ச்சியாகும்.

கடந்த கல்வியாண்டில் தமிழ்நாடு கல்லூரிகளில் தொழில்முறை ஆங்கிலம் எனும் பாடம் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் கண்டுகொள்ளலாமல் அவசரக் கோலத்தில் பல்கலைக்கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக சென்னை பல்கலைக்கழகம் எம்.பில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு வரும் கல்வியாண்டு 2021-22 முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நெறிமுறைகள் 2018, கல்லூரி ஆசிரியர்களுக்கான எம்.பில் பட்டத்திற்கான ஊக்க உயர்வை வழங்குவதுடன், பணிமேம்பாடு வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எம். பில் பட்டப்படிப்பு கலைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு கூறாத நிலையில், சென்னை பல்கலைக்கழகம் தேசியக்கல்விக் கொள்கையை புகுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது" என அதில் குற்றஞ்சாட்டியுள்ளனர்

இதையும் படிங்க: தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குக - முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.