தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் அவரை இன்று (மே 5) அண்ணா அறிவலாயத்தில் நேரில் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினரும் துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி ஆகியோரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.