தமிழகம் முழுவதும் உள்ள வேல்ஸ் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 27 இடங்களிலும், தெலங்கானாவில் 3 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான நிறுவனமொன்றில் நடந்த சோதனையை தொடர்ந்து வேல்ஸிலும் சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.