லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் மாஸ்டர். இப்படத்தை விஜய்யின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்றுமுதல் (டிசம்பர் 21) சோதனை நடத்திவருகின்றனர்.
சீன நிறுவனமான xiaomi உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில்தான் அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. xiaomi நிறுவனத்திற்குச் சொந்தமான 25 இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டும் விஜய்?