ETV Bharat / state

சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி... சபாநாயகர் அப்பாவு வேதனை... - சபாநாயகர் அப்பாவு

சீனவில் இறக்குமதி செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தியது வேதனை அளிக்கிறது - சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Sep 1, 2022, 1:29 PM IST

சென்னை: கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடந்த 65ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சபநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். இந்த காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தேசியக் கொடி ஏந்தியபடி பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் மேட் இன் சீனா' என எழுதப்பட்டிருந்தது.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு சபாநாயகர் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காமன்வெல்த் நாடாளுமன்ற சபநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி... சபாநாயகர் அப்பாவு வேதனை...

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் காகிதமில்ல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு சட்டப்பேரவை ஆரம்பித்த 1921ஆம் ஆண்டு முதல் நூறாண்டு சட்டப்பேரவை நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெற்றுவருகிறது. இப்பது சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. சீனா அதிபரும், பிரதமர் மோடியும் சந்திக்கும் வரை 57 ஆண்டுகளாக எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. சந்திப்பிற்கு பிறகு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை. ஆனால், இந்திய சீன எல்லையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அண்மையில் சீன உளவு கப்பல் இலங்கை வந்ததது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம் 8 வழி சாலையை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது... இணை அமைச்சர் எல். முருகன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.