ETV Bharat / state

பொறியியல் கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு.. வல்லுநர்களின் கருத்து என்ன?

author img

By

Published : May 8, 2023, 6:12 PM IST

Updated : May 8, 2023, 6:27 PM IST

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், பொறியியல் கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைவதாகவும், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு உயர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat கல்வி ஆலோகர்களின் கருத்து
கல்வி ஆலோகர்களின் கருத்து

சென்னை: கணக்குப் பாடத்தில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளதால், பொறியியல் படிப்பிற்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் குறையும் எனத் தெரிகிறது. மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வேதியியல், தாவரவியல் பாடங்களில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், இயற்பியல் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலிலும் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. 100க்கு 100 மதிப்பெண்களை முக்கியப் பாடங்களான இயற்பியலில் 2022ஆம் ஆண்டு 634 பேரும், 2023ஆம் ஆண்டில் 812 பேரும் எடுத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 1500 பேரும், 2023ஆம் ஆண்டில் 3909 பேரும் எடுத்துள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 47 பேரும், 2023ஆம் ஆண்டில் 340 பேரும், விலங்கியல் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 22 பேரும், 2023ஆம் ஆண்டில் 154 பேரும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் கடந்தாண்டு 3ஆயிரத்து 827 பேரும், 2023ஆம் ஆண்டில் 4ஆயிரத்து 618 பேரும் பெற்றுள்ளனர். கணக்குப் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 1858 பேரும், 2023ஆம் ஆண்டில் 690 பேரும் பெற்று 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த நிலையில் கல்வி ஆலோகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். ஆனாலும், மாணவர்கள் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வு எழுத வராத மாணவர்களை மீண்டும் எழுதுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

12ஆம் வகுப்பிற்கான கணக்குப் பாடத்திற்கான தேர்வு கடினமாக இருந்தது. அதனால் தேர்வு முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது. கணக்குப் பாடத்தில் 2022ஆம் ஆண்டில் 1858 பேரும், 2023ஆம் ஆண்டில் 690 பேரும் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் 3909 பேரும், இயற்பியல் பாடத்தில் 812 பேரும் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணக்கு பாடப்பிரிவில் 90க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல் தான் தெரிகிறது.

இது பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையில் பாதிப்பைக் கட்டாயம் ஏற்படுத்தும். தரவரிசைப் பட்டியலில் டாப் லெவலில் குறைய வாய்ப்பு இருக்கிறது. வணிகவியல் பாடப்பிரிவில் சென்டம் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. கணக்குப் பதிவியியல், பொருளியல் பாடப்பிரிவுகளில் சென்டம் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பி.காம் படிப்பிற்கு அதிகளவில் கடுமையான போட்டி இருக்கும்.

பொறியியல் படிப்பினை பொறுத்தவரையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தாலும், பிறப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பட்டப்படிப்பு மட்டும் இல்லாமல், பிற படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கும்போது விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும்” எனத் தெரிவித்தார்.

கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, “பொறியியல் படிப்பிற்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் 0.5 முதல் 9% வரையில் குறைய வாய்ப்புகள் உள்ளன. இதற்குக் காரணம் கணக்குப் பாடத்தில் சென்டம் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மாணவர்களின் மதிப்பெண்களும் அதிகளவில் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், அதே நேரத்தில் உயிரியல் படிப்புகள் எனக் கூறப்படும் விவசாயம், தோட்டக்கலைத்துறை, மீன்வளம், வனத்துறை , நர்சிங், பாராமெடிக்கல் துறைகளில் மாணவர்கள் இந்தாண்டு படிப்பதற்கு கடந்தாண்டைக் காட்டிலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. உயிரியல் பாடப்பிரிவில் சென்டம் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாவிட்டாலும், வேதியியல் பாடத்தில் சென்டம் வாங்கிய மாணவர்களின் மதிப்பெண்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கட் ஆஃப் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மீன்வளப்பல்கலைக் கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருக்கக்கூடிய பி.டெக் படிப்புகளை படிப்பதற்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் இருக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு.. ஜூன் 19 முதல் துணைத் தேர்வு!

Last Updated : May 8, 2023, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.