ETV Bharat / state

'சிவப்பு, நீலம், ரோஸ்...' -  இலவச மாதிரி டிக்கெட் வெளியீடு - மகளிருக்கு நகரப்பேருந்துகளில் இலவசம்

மகளிர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பேருந்து பயணிகளுக்கான மாதிரி பயணச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

BUS
BUS
author img

By

Published : Jun 19, 2021, 10:33 PM IST

Updated : Jun 20, 2021, 11:41 AM IST

சென்னை: கரோனா பெருந்தோற்றால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாளை மறுநாள் (ஜூன்.21) முதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி மாநகர பேருந்தை இயக்குவது குறித்து போக்குவரத்து அலுவலர்கள், பேருந்துகளை சென்னை பல்லவன் இல்லத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

BUS
இலவச பயணிகளுக்கான மாதிரி பயணச்சீட்டு

மேலும் அரசு ஏற்கனவே அறிவித்த படி மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளியின் உதவியாளர் ஆகியோருக்கான பேருந்து பயணச்சீட்டின் மாதிரி வெளியிட்டு சம்பந்தமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பொது மேலாளர்(இயக்கம்) செந்தில் நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், பயணச் சீட்டிற்கான மாதிரி இது அரசாணை வெளியிடப்பட்டள்ளது. இந்த நான்கு வகையான பயணச் சீட்டு கொண்டு சாதாரண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்ய முடியும். மிதவை மற்றும் சொகுசு பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது என்றார்.

மேலும் அவரிடம் ஜூன் 21 ஆம் தேதி மாநகர் பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்தான தகவல்கள் இன்னும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் நாளை (ஜூன்.20) தெரிய வாய்ப்பு உள்ளது என்றார்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் 105 பஸ்களில் பெண்கள் இலவச பயணம்

Last Updated : Jun 20, 2021, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.