சென்னை: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்காக மதிப்பெண் சான்றிதழ்கள் தேவைப்படுவதால்; தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியீடு வெளியிடப்பட இருக்கிறது. மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா தெரிவித்துள்ளார்.
தேர்வில் தோல்வி அடைந்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடித் தேர்வுகள் ஜூலை 25ம் தேதியிலிருந்து நடைபெறும் எனவும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடித் தேர்வுகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கு முன் கவனிக்க வேண்டியவை