ETV Bharat / state

இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல் - இஸ்ரோ நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள்

இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள்

author img

By

Published : Jan 4, 2023, 8:00 AM IST

இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள்

சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான 23ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (ஜன.3) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முன்னாள் தலைவர் சிவன் 1,121 மாணவர்களுக்கு தங்க பலகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ, நாசா இணைந்து சிந்தடிக் ஆபரேட்டர் சாட்டிலைட் என்ற செயற்கைக்கோளை கண்டுபிடிக்க உள்ளனர். இதன் வேலை 700 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பூமியில் நடக்கும் 1 சென்டி மீட்டர் நகர்வை கூட எளிதாக கண்டுபிடிக்கமுடியும்.

காலநிலை மாற்றங்கள், பூமி அதிர்ச்சி, பனி பிரதேசங்களில் பணி உருகும் நிலை, எந்த பகுதியில் அதிக மீன் இருப்பதை கண்டுபிடிக்கும் செயலி குறித்தும் முன்கூட்டிய எடுத்து சொல்லும் திறன் கூடியது. நாசா, இஸ்ரோ இணைந்து கண்டுபிடிக்கபட உள்ள இந்திய செயற்கைக்கோள் இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு முக்கியமான விடைகளை கொடுக்க உள்ளது.

இந்தியாவின் நேவிகேஷன் சிஸ்டம் சரியாக வேலை செய்து வருகிறது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஏழு செயற்கைகோளில் இருந்து சில விதமான செல்போன்களில் மட்டும் ஜி.பி.எஸ் போல் வந்துள்ளது. மேலும் அதனை பிரபலபடுத்துவதற்காக இஸ்ரோ பல முயற்சிகள் விரைவில் வர உள்ளது.

ராக்கெட் அல்லது செயற்கைகோள் செலுத்துவதோ உருவாக்குவதோ இஸ்ரோ ஆட்கள் மட்டுமின்றி தனியார் ஆட்களும் செய்யலாம் என்று புரட்சிகரமான சீர்திருத்தங்கள் கொண்டு வரபட்டன.

இதனால் தனியார் ஆட்கள் 140-க்கும் மேற்பட்டோர் விண்வெளி செயல்பாட்டை கண்டு வருகின்றனர். இதனால் 2030 இல் விண்வெளி சுற்றுசூழல் இந்தியாவிலேயே அதிக அளவில் இருக்கும். நம்முடைய தேவை மட்டுமல்ல சர்வதேச அளவில் நிறைய வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.