ETV Bharat / state

சென்னையில் 15 காவல் நிலையங்களுக்கு ISO தர சான்றிதழ்கள்! - சென்னை காவல் நிலையம்

சென்னை பெருநகர் காவல்துறையின் வடக்கு மண்டலத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் 15 காவல்நிலையங்களுக்கு ISO சான்றிதழ்கள்

author img

By

Published : Jul 29, 2023, 9:11 PM IST

சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், இராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பாலம் (Basin Bridge), எம்.கே.பி நகர், கொடுங்கையூர் மற்றும் செம்பியம், ஆகிய 15 காவல் நிலையங்கள் ISO தர சான்றிதழை, ISO தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன் வழங்கினார்.

சென்னை பாரிமுனையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் ரம்யா பாரதி, உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்திய அரசாங்கத்தின், இந்திய தர கவுன்சிலின் (QCI-GOI) பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டிற்காக, மேற்படி 15 காவல் நிலையங்களுக்கு சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழான ISO 9001:2015 வழங்கி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள், வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை, கட்டிட பராமரிப்பு போன்ற உள்கட்டமைப்பு கூறுகளை பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும், வசதியாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் நல்ல சுற்றுச்சூழலை அளிக்க, இயற்கை சூழல் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் காவல் நிலையப் பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. செயல்முறை மற்றும் உள்கட்டமைப்பு கூறுகள் ஆகிய இரண்டிலும் தரநிலைகளின் தேவைகளை மேற்கூறப்பட்டுள்ள 15 காவல் நிலையங்கள் பூர்த்தி செய்து உள்ளது.

பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர், புகார் அளிக்க வரும் நபர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்தும், அவர்களின் புகார் மீது உரிய ஒரு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு பணிகள் செய்யப்பட்டு, தற்போது ஐஎஸ்ஓ தர சான்றிதழ்கள் (ISO Certificate) பெறப்பட்டுள்ளது.

15 காவல் நிலையங்களில் மட்டும் பெறப்பட்டுள்ள நிலையில், மற்ற 102 காவல் நிலையங்களுக்கும் இதே போன்று தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவததாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆணையர் வீரக்குமார், "ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட காவல் நிலையங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டு, பழமை மாறாமல் வடக்கு கடற்கரை காவல் நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் உள்பட 15 காவல் நிலையங்கள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்று உள்ளது.

இதற்காக ஏராளமான காவலர்கள் உறுதுணையாக பணிகளை மேற்கொண்டு உள்ளனர். பொது மக்கள் தங்கள் மன கவலைகளை புகாராக காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் போது, அவர்களின் மன நிலையை மாற்றுவதற்கான இடம் காவல் நிலையமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இது போன்று காவல் நிலையத்தின் தரத்தை உயர்த்தி, தற்போதைய சூழ்நிலைக் கேற்றவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் இதன் மூலம் குற்றங்கள் குறையவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் ஆங்கிலேயர்கள் முதன்முறையாக 18 ஆம் நூற்றாண்டில் பொதுமக்களுக்காக கட்டிய காவல் நிலையங்களை 135 ஆண்டுகள் பிறகும் அதன் பழமை மாறாமல், அதை மேம்படுத்தப்பட்டு தற்போது ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெறறுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் உதவி ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு தயாராகும் ஆவின் பலகாரங்கள்... அமைச்சர் தந்த தகவல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.