சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'விக்ரம்' படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பையும், பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது.
முன்னதாக ரஜினி நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடைபெறவில்லை. அதன் பிறகுதான் கமல்ஹாசனே கதாநாயகனாக நடிக்க லோகேஷ் இயக்க 'விக்ரம்' படத்தை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிகனாக கமல்ஹாசன் தயாரிப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் இயக்க படம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினர். அதன்பின் 'விக்ரம்' படத்தை வெகுவாகப் பாராட்டினார் ரஜினி என்ற செய்திகளும் வெளிவந்தன.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது விஜய் நடிக்கும் படத்தை இயக்கி முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. அதன் பிறகுதான் 'கைதி 2' படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் தனது 169ஆவது படத்தை ரஜினிகாந்த் முடித்த பின் அவரது 170ஆவது படமாக லோகேஷ் இயக்கும் படம் உருவாகலாம். அதற்குள் விஜய்யின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துவிட்டு, ரஜினி படத்திற்கு வந்துவிடுவாராம்.
இதையும் படிங்க:முன்னணி நடிகருக்கு இணையாக இயக்குனர் லோகேஷூக்கு கட் அவுட்; மாஸ் காட்டிய ரசிகர்கள்