ETV Bharat / state

புதிய தலைமை செயலாளர் இவரா?.. தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுவது என்ன?

author img

By

Published : Jun 2, 2023, 10:17 PM IST

தலைமைச் செயலாளர் இறையன்பு விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chife secreatry
தலைமைச் செயலாளர்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு நியமிக்கப்பட்டார். இவரது பணிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படும் நிலையில், அவருக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் கசிந்தது. அதேநேரம், புதிய தலைமை செயலாளர் பதவிக்கான போட்டியில் சிவ்தாஸ் மீனா, ஹன்ஸ் ராஜ் வர்மா, எஸ்.கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றன.

இந்நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ் ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் 1986ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்ஸ் ராஜ், ஓய்வு பெற இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும் என்றும், எனவே அவர் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் சிவ்தாஸ் மீனா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் தனிச் செயலாளராக பணி புரிந்தவர் சிவ்தாஸ் மீனா. மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது அவரது பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக டெல்லியில் பணியாற்றினார். அங்கு பணியில் இருந்த போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசுடன் இணக்கமாக பல பணிகளை செய்து முடித்து தந்தவராக கருதப்படுகிறார்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் ஆணையராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் சிலர் மீதான ஊழல் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த புகார்கள் மீது, ஆணையராக இருந்த சிவ்தாஸ் மீனா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவற்றை கிடப்பில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

2021ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் விமர்சனமாக உள்ளது. இதனால் அறப்போர் இயக்கம் உட்பட ஏராளமான தன்னார்வ நல அமைப்புகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் சிவ்தாஸ் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளுடன் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இதற்கிடையே அவர் நகராட்சி நிர்வாக செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். எனினும், சிவ்தாஸ் மீனாவை தலைமைச் செயலாளராக நியமித்து தங்களுடைய கைப்பாவையாக வைத்து கொள்ளலாம் என முதலமைச்சர் அலுவலக உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நேற்று (ஜூன் 1) மாலை, ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், புதிய தலைமை செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்பட இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: IT Raids: கரூரில் 8 நாளாக நடந்த ஐடி ரெய்டு.. பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.