ETV Bharat / state

மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்குமா தேமுதிக...!

சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்கு விழுக்காடு 2.19 ஆக குறைந்ததால் தேமுகவின் கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

File pic
author img

By

Published : May 26, 2019, 9:23 AM IST

தேர்தல் ஆணைய விதியின்படி மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகளில் ஆறு விழுக்காடு வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும். அதுமட்டுமல்லாது ஒரு மக்களவைத் தொகுதி அல்லது இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

நடிகர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 8.38 விழுக்காடு வாக்குகளை பெற்றது. இதனையடுத்து 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட தேமுதிக 10.3 விழுக்காடு வாக்குகளை பெற்றது.

அதேபோல் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுகவின் வாக்கு விழுக்காடு 7.9 ஆக குறைந்தது. 2014இல் 5.1 ஆக சரிந்தது.

தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு விழுக்காடு 2.39 ஆகியது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வாக்கு விழுக்காடு 2.19 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மூன்று விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கு விழுக்காடு பெற்றுள்ளதால் தேமுதிகவின் மாநில கட்சி அந்தஸ்து ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.