ETV Bharat / state

இட ஒதுக்கீடு முறைகேடை கல்லூரி ஒப்புக்கொள்ளாவிட்டால் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் - எச்சரித்த உயர்நீதிமன்றம்

author img

By

Published : Jul 1, 2023, 2:32 PM IST

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முறைகேடாக சேர்க்கப்பட்ட ஐந்து மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தைப் பெறவில்லை எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தால் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இட ஒதுக்கீடு முறைகேடை கல்லூரி ஒப்புக் கொள்ளாவிட்டால் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும்

சென்னை: மாங்காட்டில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில், கடந்த 2019-20ஆம் ஆண்டில் மருத்துவ தேர்வுக் குழு பரிந்துரைக்காமல் மாணவர் சேர்க்கை கடைசி நாளான 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ல் ஒன்பது மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது. இதில், ஐந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, இந்த ஒன்பது மாணவர்களையும் நீக்கம் செய்யும்படி, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தனியார் கல்லூரிக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், படிப்பைத் தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் பூஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவர் சேர்க்கைக்காக எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்கிற விவரங்களை மனுவாக தாக்கல் செய்ய மாணவர்களின் பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெற்றோர் தாக்கல் செய்த மனுக்களில், மாணவர் சேர்க்கைக்கு, 45 லட்சம் முதல் 65 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குக் கல்லூரி தரப்பில் கூறப்பட்டதாவது, மாணவர் சேர்க்கையின் கடைசி நாளில் 9 இடங்களும் காலியாக இருந்ததால், நீட் தேர்வில் 112 முதல் 290 மதிப்பெண்கள் வரை பெற்ற 9 பேர் சேர்க்கப்பட்டதாகவும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 109 மற்றும் 123 மதிப்பெண்களை வாங்கியவர்களையும், தனியார் கல்லூரிகளில் 107 முதல் 112 மதிப்பெண்கள் வாங்கியவர்களை சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மதுரையில் மீண்டும் மீன் சிலை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2019-20ல் சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே 4 ஆண்டுகளை முடித்துவிட்ட நிலையில், அவர்களை நீக்குவதால் எந்தப் பயனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கடைசி நாளில் சேர்க்கப்பட்ட 9 பேரில் 5 பேர் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனுமதி இல்லாமல் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதனால் 2023-24ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் இருந்து 5 இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டுமென தனியார் கல்லூரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட 5 மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 2 கோடியே 76 லட்ச ரூபாயை 2019ஆம் ஆண்டிலிருந்து 6 சதவீத வட்டியுடன் சேர்த்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தேர்வுக் குழு செயலாளர் பெயரில் தனிக் கணக்கு தொடங்கவும்; அதில் வைப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும் கல்லூரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக வழங்க இத்தொகையை பயன்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நன்கொடை தொடர்பாக பெற்றோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு வசூலிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தால், சிபிசிஐடி விசாரணயை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.

விதிகளை மீறி மாணவர்களை சேர்த்தது குறித்து, தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Government Jobs: அரசுப் பணியிடங்களில் இனி முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.