ETV Bharat / state

மருத்துவர்கள் பணியிட கலந்தாய்வில் விதிமீறல்?

அரசு மருத்துவர்களுக்கு கடத்த ஏப்ரல், மே மாதம் நடத்தப்பட்ட பணியிடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

மருத்துவர்கள் பணியிட கலந்தாய்வில் விதிமீறல்

author img

By

Published : Aug 5, 2022, 4:58 PM IST

சென்னை: அரசு மருத்துவர்கள் கால சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை மற்றும் செயலாளர் சையத் தாகிர் ஹூசேன் கூறியதாவது, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து சட்ட போராட்டக் குழு போராடி வருகிறது.

திமுக ஆட்சி அமைந்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தங்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை எனவும், எனவே மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். மேலும் தங்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் பணியிட கலந்தாய்வில் விதிமீறல்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஏப்ரல் மே மாதம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறப்பு பிரிவு துறைகளில் அந்தத் துறை சார்ந்தவர்களை நியமிக்காமல் எம்பிபிஎஸ் போன்ற பட்டங்களை பெற்றவர்களை நியமித்து உள்ளனர். சிறப்பு பிரிவில் அதற்கான படிப்பை முடித்த சிறப்பு மருத்துவர்கள் நியமித்தால் மட்டுமே நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்க முடியும்.

இதுபோன்று விதிகளை மீறி தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 40 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற வேண்டியவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவ கலந்தாய்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதனைத் தொடர்ந்து அவரின் சிறப்புச் செயலாளர் மருத்துவக் கல்வி இயக்குநருடன் நேரடியாக ஆலோசனை நடத்தினார். அப்பொழுது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை மீறி பணியிடம் நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்களை மாற்றி விட்டு அந்த பிரிவிற்குரிய சிறப்பு பட்டத்தை பெற்ற மருத்துவர்களை நியமிக்க என மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

ஆனால் விதிகளை மீறி சிறப்பு மருத்துவ பிரிவில் அதற்குரிய மருத்துவர்களை நியமிக்காமல் வேறு மருத்துவர்களை நியமித்துள்ளனர் என குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: மொபைல் செயலி மூலம் மோசடி: அரசு பள்ளி ஆசிரியை உட்பட இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.