உலகம் முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் தலைவிரித்து ஆடுகிறது. தொற்றின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும், ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஊரடங்கு மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளும் வழங்கி வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை இயக்குநரும், டிஜிபியும் ஆன சைலேந்திர பாபு, வீட்டில் இருத்தே பணியாற்றும் ஊழியர்களுக்கு சைபர் க்ரைம் குற்றவளிகளைப் பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “எந்த வங்கிகளில் இருந்தும் தனது சேமிப்பு கணக்காளர்களிடம் இருந்து வங்கிதாரர்கள் சேமிப்பு கணக்கு விவரங்களையோ, ஓடிபி (OTP) எண்ணையோ கேட்க மாட்டார்கள் என்றும், அவ்வாறு கேட்கும் நபர், போலியானவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முக்கவசம் அணிந்தும், கைகளை சோப்பினால் கழுவியும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 1 கோடி ரூபாய் சொகுசு காரைத் திருடியர் கைது