ETV Bharat / state

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் - மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை காவல் துறையின் புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு
அரசு
author img

By

Published : Jul 1, 2020, 1:19 AM IST

மாநிலம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், காவல் துறை செயலாக்கம் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய ஐஜியாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக தஞ்சை டிஐஜி லோகநாதனும், சென்னை துணை ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு கூடுதல் காவல் துறை இயக்குநராக இருந்த ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.