சென்னை: ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
பின்னர், சென்னை அணி விளையாடிய தொடங்கிய போது, மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு, டக்வொர்த் லுயிஸ் முறைப்படி, 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக குறைக்கப்பட்டது. பின்னர் அதிரடியாக விளையாடிய சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம் 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றிய ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை (IPL trophy) அகமதாபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: MS Dhoni retirement: ஐபிஎல் ஓய்வு குறித்து பேசிய தோனி.. அதிலும் ஒரு ட்விஸ்ட்!
சூட்கேஸ் மூலம் கொண்டு வரப்பட்ட ஐபிஎல் கோப்பை காரில் வைத்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது இன்று மாலை சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் கோப்பையை வைத்து பூஜை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளம்பிங் உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் சி இ ஓ விசுவநாதன், ”சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது எந்த வெற்றி கொண்டாட்டத்திற்கும் திட்டமிடப்படவில்லை. வெற்றி பெற்ற பின்பு தற்போது தான் சென்னை வந்துள்ளோம்.
இதையும் படிங்க: IPL 2023 Season Awards: 5வது முறை கர்ஜித்த சிஎஸ்கே.. விருதுகளின் முழு விவரம்
தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவேன் என அவரே தெரிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வீரர்கள் யாரும் சென்னை வரவில்லை. விரைவில் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'வெறித்தனம்.. வெறித்தனம்..' வைரலாகும் சிஎஸ்கே ரசிகர்களின் கொண்டாட்டங்கள் வீடியோஸ்!