சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகன் பிரபாகனுக்கு முடியிறக்கி, காதணி விழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர் அவரது அன்பு தமிழ் சொந்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், "வருகின்ற மாசி 3ஆம் தேதி அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்டம், காளையார் கோயிலுக்கு அருகிலுள்ள, முடிக்கரை கிராமத்தில் எங்கள் குலதெய்வமான வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் வைத்து என்னுடைய அன்பு மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடியிறக்கி, காதணி விழா நடைபெற இருக்கிறது. என் உயிரினும் இனிய உடன்பிறந்தார்கள், எனது அன்பு உறவுகள், தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் இதனையே அழைப்பாக ஏற்று, அவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.